அறிவுமதியின் சிறுகதை - பெண்ணியப்பார்வை -முனைவர் சி.முடியரசன்
அறிவுமதியின் சிறுகதை - பெண்ணியப்பார்வை முனைவர் சி. முடியரசன் உதவிப் பேராசிரியர், கணேசர் கலை அறிவியல் கல்லூரி, மேலைச்சிவபுரி. சமுதாயம் என்பது பெண்களை உள்ளடக்கியது. பெண்களில்லாத சமுதாயம் முழுமை பெறாத அமைப்பே ஆகும். பெண்கள் இல்லாத கலை, இலக்கியம் கற்பனை செய்து பார் க் க இயலாதவை. பெண்கள் இல்லாத படைப்புகள் முழுமை பெறுவதில்லை. சமுதாய அமைப்பிலும் கலை இலக்கிய வடிவங்களும் பெண்களுக்கு கனிசமான இடமுண்டு என்பதை விடப் பெ ரும்பங் கு பெண்களுக்கு இடம் உள்ளது. ஓவியம், சிற்பம், பண், இசை, பாடல் என எல்லா நிலைகளிலும் பெண்களுக்கு முதன்மையான இடமுண்டு. இவற்றில் பெண்களே படைப்புப் பொருளாக உள்ளனர். பெரும்பான்மை ஆண்கள் படைப்பாளர்களாகவும் சிறுபாண்மையினராகப் பெண்களும் உள்ளனர். இதற் கு சமுதாயக் கட்டமைப்பும் ஒரு காரணம். பெண்களின் துயரம், வலி, விருப்பங்கள் ஆகியவற்றை இப்படைப்புகள் வெளிப்படுத்துகின்றன . சங்க கால அவ்வையார் முதல் இன்று வரை பல படைப்பாளர்களை நாம் அறிந்துள்ளோம். இதனையே பெண் மொழி, பெண் எழுத்து என வழங்கி வருகின்றனர். பெண்களுக்கே உரிய சிக்கல்களைப் பேசு...